நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றாடல் பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரம் 02.02.2026 அன்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இதற்கமைய சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக பொலிஸ் பிரிவு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு இணைந்து இதனை முன்னெடுத்துள்ளது.
குறித்த வேலைத் திட்டம் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப விழாவில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜீ.எம்.ஆர்.டி. அபொன்சு அவர்கள், Clean Sri Lanka செயலாளர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன அவர்கள், சமூக பொலிஸ் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டா பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.ஏ.ஆர்.என். ராஜபக்ஷ அவர்கள், சமூக பொலிஸ் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே. பிரியந்த அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே. மனோஜ் பெரேரா அவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேல் மாகாணத்தில் 126 பொலிஸ் நிலையங்களுக்கென 2500 மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










