கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை புதிய சொகுசு புகையிரத சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு புகையிரதத்தை சேவையை இயக்குவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில், இம் மாதம் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு புகையிரத சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express புகையிரதம், பிரதி சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அதேநேரம், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த தொடருந்து பயணிக்கும் என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects