ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை…..
எம்மில் சிலருக்கு இரவு நேரத்தில் பார்வை திறன் குறைபாடு ஏற்படும். வேறு சிலருக்கு இரவு நேரத்தில் பக்கவாட்டு பார்வை திறன் குறைபாடு உண்டாகும்.
இத்தகைய அறிகுறிகள் விழித்திரையில் ஏற்படும் அரிய பாதிப்பு என்றும், இதனை மருத்துவ மொழியில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது ஜீன் தெரபி எனும் சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்பது எம்முடைய விழித்திரையைப் பாதிக்கும் அரிய வகையினதான கண் நோயாகும்.
விழித்திரை என்பது எம்முடைய கண்ணின் பின்புறத்தில் உள்ள திசுக்களின் ஒளி உணர்திறன் அடுக்கு என விவரிக்கலாம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் விழித்திரையில் உள்ள செல்கள் நாளடைவில் சேதமடைந்து பார்வை இழப்பை உண்டாக்குகிறது.
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்பது மரபணு சார்ந்த குறைபாடாகும். பொதுவாக இத்தகைய பாதிப்பு குழந்தை பருவத்திலேயே ஏற்படும். பெண் பிள்ளைகளை காட்டிலும் ஆண் பிள்ளைகள் தான் இத்தகைய பாதிப்பிற்கு அதிகமாக ஆளாகிறார்கள்.
மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் வைத்திய நிபுணர்கள் எலெக்ட்ரோரெட்டினோகிராபி எனும் ஒரு பிரத்யேக பரிசோதனையும், மரபணு பரிசோதனையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அதீத வெளிச்சத்தை பார்க்க இயலாத நிலையும் வண்ணங்களை துல்லியமாக அவதானிக்க இயலாத நிலையும் சிலருக்கு ஏற்படும். இவர்களுக்கு தற்போது ஜீன் தெரபி எனும் சிகிச்சை அறிமுகமாகி நிவாரணம் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் அமர் அகர்வால்



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










