மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இணையவழி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 04.08.2025 அன்று நடைபெற்றது.
இச் செயலமர்வு தற்போதைய சூழ்நிலையில் இணைய வழி ஊடுருவல் தொடர்பாக உத்தியோகத்தர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இடம்0பெற்றது.
இதன் போது இணைய வழி ஊடுருவலை தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நபரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம பொறியாளர் ரீ.சுமன், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்சசிகரன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் உயர் அதிகாதிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இணைய ஊடுருவலை மேற்கொள்ளும் நபர்கள் கையாலும் உத்திமுறைகள், அநாமதேய செயலிகளின் பாவனைகளை தவிர்த்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கே. சதிஸ்குமாரினால் தெளிவூபடுத்தப்பட்டமை குறிப்பிடப்பட்டது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










