பஹாமாஸ் கொடியுடனான ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2 ஆயிரத்து 324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145 பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளது.
இன்று மாலை குறித்த கப்பல் தாய்லாந்து நோக்கி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலின் பயணிகள், காலி மற்றும் கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇