சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சிகளை நிறைவுசெய்த 1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

அதன் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பயிற்சியை முடித்த, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்த மருத்துவர்கள், அமைச்சின் மனிதவள முகாமைத்துவ மற்றும் தகவல் அமைப்பு ஊடாக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II மருத்துவர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தங்கள் விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects