கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11.08.2025) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படுட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன் பிரகாரம், கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை வரையிலான குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படுட்டுள்ளது என்று அச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்று (11.08.2025) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு ரன்பொகுணகம, பட்டலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய வலயங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects