‘Gmail முகவரியை மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நீண்ட காலமாக பயனர்கள் எதிர்பார்த்திருந்த ‘Gmail முகவரியை மாற்றும்’ வசதியை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

2004 ஆம் ஆண்டு Gmail தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருந்த பழைய மற்றும் சங்கடமான மின்னஞ்சல் முகவரிகளுக்கு இனி விடைபெறலாம்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிடுகையில், “2004 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் Gmail முகவரி இன்னும் அதே காலத்திலேயே சிக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பழைய விளையாட்டுத்தனமான பெயர்களைக் கொண்ட முகவரிகளை மாற்றி, புதிய பெயர்களைத் தேர்வு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பயனர்கள் தங்களது தற்போதைய கூகுள் கணக்கை மாற்றாமலேயே புதிய Gmail முகவரியைப் பெற்றுக்கொள்ள முடியும்

Gmail அல்லது கூகுள் கணக்கின் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.

அங்கு கிடைக்கக்கூடிய (Available) புதிய முகவரியைத் தேர்வு செய்யவும்.

தற்போது இந்த வசதி குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

பழைய முகவரிக்கு என்ன நடக்கும்?

உங்கள் பழைய முகவரி உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டே இருக்கும். எனவே வேறு யாராலும் அந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது.

பழைய முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினாலும், அது உங்கள் புதிய முகவரியின் அதே Inbox-க்கு வந்து சேரும்.

ஒரே கணக்கில் இரண்டு முகவரிகளையும் நீங்கள் Sign-in செய்யப் பயன்படுத்தலாம்.

இதேவேளை மின்னஞ்சல் முகவரி மாற்றத்துடன், “AI Inbox” என்ற புதிய அம்சத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ‘AI Inbox’ வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects