6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் மத்தியில் அம்மை நோய் அதிகளவில் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத் திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள காலப்பபகுதியில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று இந்தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவவுறுத்தியுள்ளது.
அம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇