கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க புதிய புகையிரதம் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி நாட்களில் இப் புதிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், Ella Weekend எக்ஸ்பிரஸ் எனும் இப் புதிய புகையிரத சேவையானது இம் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், 17 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










