மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் தொடர்பான செயலமர்வு !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் ஊடாக கணக்கு நடவடிக்கையை நடாத்தி செல்லுதல் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான செயலமர்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 10.11.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கி சங்க முகாமையாளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர். இச் செயலமர்வு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி வங்கிகளின் கணனி பிரிவிற்கான தொழில் நுட்ப உத்தியோகத்தர் த.பவளேந்திரனினால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவிற்கான முகாமையாளர் திருமதி நிர்மலாதேவி கிரிதராஜ் மற்றும் மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் எனப் பலரும் கலந்து கொண்டானர்,

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects