மனித உருவ ரோபோவினால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையமொன்று சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது.
9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம், “கால்போட்” என்ற மனித உருவ ரோபோவால் இயக்கப்படுகின்றது.
குறித்த வர்த்தக நிலையத்தில் பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ரோபோ பல மொழிகளைக் கையாளும் திறன் கொண்டது என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










