மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் நவீன பரிசோதனை…..

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் நாளாந்தம் துவிசக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள். மேலும் அவர்கள் நாளாந்தம் நான்கு மணித்தியாலம் வரை மாசடைந்த சுற்றுச்சூழலை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை உண்டாக்குகிறது என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் ஆண்டுதோறும் தெற்காசிய நாடுகளில் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிய இயலாதா? என்ற வினா நோயாளிகளிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் இதற்கான பரிசோதனை முறை பரவலாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் மேலத்தேய நாடுகளில் இதற்கான பரிசோதனை நடைமுறையில் இருக்கிறது.

நீங்கள் ஐம்பது வயதை கடந்தவர்களாக இருந்தால் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் கடந்த காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு ஆண்டு கணக்கில் இடைநிறுத்தம் செய்தவராக இருந்தால் உங்களை நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? என அறிந்து கொள்ள low dose CT scan எனும் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகளின் மூலம் உங்களுடைய நுரையீரலின் செயல் திறனை துல்லியமாக அவதானித்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா? ஏற்பட்டிருக்கிறதா? என்பதனை கண்டறிகிறார்கள். அதன் பிறகு பாதிப்பு இருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்டால் சத்திர சிகிச்சை- கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் நவீன சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள்.

ஆனால் பொதுவாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு எண்பது சதவிகிதம் கடந்த பின்பே கண்டறியப்படுகிறது. ஏனெனில் அப்போதுதான் அதற்கான அறிகுறி வெளிப்படுகிறது. இவர்களுக்கு முழுமையான நிவாரண சிகிச்சை வழங்க இயலாத நிலை இருந்தாலும் அவர்களின் ஆயுளை நீட்டிப்பதற்கான நவீன சிகிச்சைகளை வழங்க முடியும்.

வைத்தியர் சதீஷ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects