தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல புகையிரத சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் , இன்று 14.11.2023 காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த தொடருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து பாணந்துறை வரை பயணிக்கும் புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40க்கு பெலியத்த நோக்கி புறப்படவிருந்த புகையிரத சேவையும் தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇