கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமயக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரையிலும், போயா தினங்களில் நாட்களில் முழு நாளும் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects