இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 02.07.2026 அன்று அறிவித்துள்ளது.
இந்தத் தொடர் 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு அமைவாக நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்குக் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










