இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன் பிராகாரம், இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் 414.38 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது அது, தற்போது 9.84 வீதம் அதிகரித்து 2025 ஆம் ஆண்டில் 455.16 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்க மன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 26 சதவீதம் வலுவான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதே வேளை, ‘ஏனைய’ சந்தைகளுக்கான ஏற்றுமதி 24 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் பிரித்தானிய சந்தையில் 0.72 சதவீதம் மட்டுமே சிறிய அதிகரிப்பு காணப்பட்டது, அத்துடன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.7 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்க மன்றம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










