இறக்குமதி செய்யப்பட்ட 15,000 மெற்றிக் தொன் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் தரப்பினர் அரிசி இறக்குமதி செய்வதற்காக, அரசாங்கம் வழங்கிய அனுமதி நாளையுடன் (10.01.2025) நிறைவடைகிறது.
எனவே , அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியிருந்தது.
தனியார் தரப்பினர் மற்றும் அரசாங்கத்தினால் 07.01.2025 அன்று ஒரு இலட்சத்து 1,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றுள் 40,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 61,000 மெற்றிக் தொன் நாடு அரிசியும் அடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇