பூமியில் 11.70 கோடி ஏரிகள் உள்ளன. இவை இயற்கை வளங்களில் முக்கியமானவை. நன்னீர், குடிநீர் வழங்கல், விவசாயம், தொழில் துறைக்கு பயன்படுகிறது.
மேலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணற்ற மீன்கள், தாவரங்கள், வனவிலங்குகள் போன்றவற்றுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. வெள்ளநீர், கார்பனை உறிஞ்சி பூமியை குளிர்ச்சியாக வைத்திருப் பதன் மூலம் காலநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளை பாதுகாக்க கோரி ஐ.நா., சார்பில் ஓகஸ்ட் 27 ல் உலக ஏரிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










