போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் வெல்லாவெளியில் இடம் பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வீதி புனரமைப்பு, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விடயங்கள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் பிரச்சனை, காணிப் பிரச்சனைகள், பழுகாமம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும், வீட்டுத் திட்டங்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்பான விடயங்கள், யானை மனித மோதல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடியதுடன், சில விடயங்களுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டது.

குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலகம், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects