மட்டக்களப்பில் திரையிடப்பட்ட “தி மாதர்” திரைப்படம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

WINDSOR PRODUCTION தயாரிப்பிலும், பிரவீன் கிருஷ்ணராஜின் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட தி மாதர் எனும் நடுத்தர நீளத் திரைப்படம் 30-08-2025 அன்று மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் திரையிடப்பட்டது.

கோபி றமணன், விக்னேஷன் தேவராஜ், றூபஷாலினி ராஜ்குமார், ரஷிக்கா அருட்செல்வம், ஜனா RJ, நீல் ரெக்சன் உட்பட பலரின் நபிப்பிலும், சஞ்சித் லக்ஸ்மனின் இசையமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பிலும், சங்கர்ஜன் மற்றும் தினேஷ் நா ஆகியோரின் ஒலிக்கலவையிலும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினைப் பார்வையிட மட்டக்களப்பின் சினிமாத்துறை சார்ந்த பலரும், சினிமா ஆர்வலர்களும், பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.

பெண்கள் மீதான வன்முறை – அதற்கான தீர்வு எனும் அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை நகர்வதாகவும், படத்தில் நடிகர்களின் நடிப்பு உட்பட தொழில்நுட்ப ரீதியாகவும் இரசிக்கத்தக்க வகையில் உள்ளதாக படத்தினைப் பார்த்த பலரும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இத்திரைப்படத்தின் திரையிடலோடு சேர்த்து விரைவில் திரையிடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் படைப்பான “சாவடி” உட்பட பல திரைப்படங்களின் முன்னோட்டக் காணொளிகளும் மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “சிலோன் ஸ்ரீவள்ளி” எனும் காணொளிப் பாடலும் திரையிடப்பட்டமை விசேட அம்சமாகும்.

கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பிலும் திரையிடப்பட்டமையும், இத்திரைப்படத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கோபி ரமணன், ஜனா RJ, சஞ்சித் லக்ஸ்மன், சங்கர்ஜன், தினேஷ் நா, ரஷிக்கா அருட்செல்வம் ஆகிய கலைஞர்கள் பங்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி : Chilli Chips 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects