இலங்கையில் பால் உற்பத்தியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் பால் உற்பத்தித் துறையை வலுப்படுத்தி,உள்நாட்டு பால் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதி வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதற்காக, அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

அதன் பிரகாரம், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துதல், புதிய தொழில்முனைவோரை இத் தொழிலில் நுழைய ஊக்குவித்தல் மற்றும் பால் தொடர்பான பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் வழிகளை வலுப்படுத்துதல் ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில் அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவை இதனைச் செயல்படுத்துவதில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects