இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளராக திருமதி ஜோனி சிம்ப்சன் (Joni Simpson) 15.01.2024 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந் நியமனம் ஆனது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹோங்கோ (Gilbert Houngbo) வினால் வழங்கப்பட்டது.
ஜோனி சிம்ப்சன் உலகின் பாலின சமத்துவம் மற்றும் உள்வாங்கல் துறைகளில் 25 வருடங்களுளக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் ஆவார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், ஜோனி சிம்ப்சன் இலங்கைக்கான பணிப்பாளர் நியமனத்துக்கு முன்னர், திருமதி ஜோனி சிம்சன் கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான பாலின சமத்துவம் மற்றும் பாரபட்சம் காட்டாமை ஆகிய துறைகளில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சிரேஷ்ட தொழிநுட்ப நிபுணராக கடமையாற்றியுள்ளதுடன், அப் பதவில் தொழிலில் வன்முறை, பாரபட்சம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை நீக்குதல் பராமரிப்பு கொள்கைகள் மற்றும் சேவைகளை வழங்குதல் முன்னேற்றல் வணிக மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இணைப்பு வலையமைப்பு மேம்படுத்துதல் ஆகியன தொடர்புடைய சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் முயற்சிகளை வடிவமைத்தார்.
மேலும், இவர் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நாட்டுக்கான இடைக்கால பணிப்பாளராகவும் (பொறுப்பதிகாரி) கடமையாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் பெண்களின் தொழில்முனைவு மற்றும் தொழில்முனைவு கல்விக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் உலகளாவிய முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
கனடா நாட்டவரான திருமதி. சிம்ப்சன், கலாச்சார மானுடவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇