இரு அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் 15.10.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

டபிள்யு. எஸ். மங்கள இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ( அனர்த்த முகாமைத்துவம்) பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியதோடு டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றியிருந்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects