அஸ்வெசும பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (01.01.2024) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

1,410,064 பேருக்கு டிசம்பர் மாத கொடுப்பனவையும் எம்மால் செலுத்த முடிந்தது. 20 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்களை வழங்குவதே எமது இலக்கு.

2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சில குறைபாடுகளைத் தவிர்த்து நிவாரணங்களைப் பெற வேண்டிய குழுவைக் கண்டறிந்து அவர்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects