புதிய வரிதிட்டத்தின் கீழ் இந்திய அரசு, இந்தியப் ப்ரீமியர் லீக் போட்டியின் டிக்கெட்டுக்களுக்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, முன்னதாக 1,280 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டின் விலை எதிர்காலத்தில் 1,400 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
குறித்த விலை அதிகரிப்பு ஐ.பி.எல் ஐ நாட்டின் மிக உயர்ந்த வரி வரம்பாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், சர்வதேச மற்றும் மாநில கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை குறைவடையும் வாய்ப்பு காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










