இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை விரிவாக ஆராயும் நோக்குடன், இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் 33 பேரைக் கொண்ட குழு 17.11.2025 அன்று நாட்டை வந்தடைந்தது.
10 நாட்களுக்கு நீடிக்கும் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் குறித்த குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இவர்கள் தமது விஜயத்தின் போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பயணம் செய்து, முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதுடன், இலங்கையின் சுற்றுலாச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடவுள்ளனர்.
இதனூடாக இஸ்ரேலிய சந்தைக்குள் மேம்படுத்தப்பட்ட பயணப் பங்களிப்புகள் மற்றும் விளம்பரங்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில், 17.11.2025 அன்று இலங்கையை வந்தடைந்த இந்த குழுவினருக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
இஸ்ரேலிய பயணச் சந்தையுடன் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான உறவை மேம்படுத்த இந்தக் குழுவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










