கடந்த 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினை நினைவு கூரும் முகமாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வானது (26.12.2023) அன்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொதுமக்கள், ஆலய பரிபாலன சபையினர், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
இதனை முன்னிட்டு அனர்த்தங்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து மக்களுக்கான பிரார்த்தனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுடன்,இவ்வாறான இழப்புக்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது, எதிர்காலத்தில் சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தயார்ப்படுத்தலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுகள் இதன்போது நிகழ்த்தப்பட்டன.
அத்தோடு அனர்த்த முகாமைத்துவ சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதுடன், விசேட நிகழ்வாக மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன்,பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇