அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவாகியுள்ளார்.
முன்னதாக, 10 ஆவது நாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி குறித்த பதவியிலிருந்து விலகினார்.
இந் நிலையில், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக அக் குழு
இன்று (12.09.2025) கூடியது.
அதன்போது, தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










