பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு , நியாயமான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு செயல்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தில் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின் (MIC) ஏற்பாட்டில் 11.09.2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நியுசிலாந்து தூதுவராலய உயர் அதிகாரி பிரற்சில்ட்ஸ் கலந்துகொண்டார்.

இதன் போது, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சட்டங்கள், புலம் பெயர் தொழிலாளர்களில் உரிமைகள் மனித கடத்தலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை சர்வதேச மையத்தின் புலம்பெயர் தகவல் மையத்தின் (ICMPD) சிரேஸ்ட அதிகாரி கொல்டா ரோமாவால் வழங்கப்பட்டது.

முறையான புலம் பெயர்வு மற்றும் முறைசாரா புலம் பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பான தொளிவூட்டல்கள் இதன் போது துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வு நியுசிலாந்து நாட்டின் நிதி உதவியின் கீழ் இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினரினால் (ICMPD) அரச அதிகாரிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

நிகழ்வில் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள், இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிசார் மற்றும உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects