கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டண அறவீடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. 

இன்று (18.03.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார். 

தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநகர சபையின் நிதிக்குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஏகமனதாக இணக்கம் தெரிவித்து அதனை நிறைவேற்றியுள்ளது. 

இந்த நிலையில், கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்த நடைமுறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் பிரதி மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects