மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகள் பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகள் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிறவற்றில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகள், வேலைகள் அல்லது உழைப்பு, அவசியமான அல்லது செய்ய வேண்டியவை என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects