யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP) இல் இணைந்து பணமீட்டுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யூடியூப் மூலம் விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டும் வசதிகளைப் பெற விரும்பும் சேனல்கள் இனி பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்தொடர்பவர்கள்: குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.
பார்வை நேரம்: கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்குக் கிடைத்த மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
YouTube Shorts: Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் என்ற வரம்புக்கு பதிலாக 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த புதிய தகுதி வரம்புகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், YouTube Partner Program இல் இணைந்து பணம் ஈட்ட விரும்பும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








