ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, A மற்றும் B ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம்,, A பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய அணி, 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஓமானிய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த அணிக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை.
Bபிரிவில், இலங்கை அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற நிலையில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணி, 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஹொங்கொங் அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது.
இதனால் அந்த அணிக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










