புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 21.09.2025 அன்று தெரிவித்துள்ளது.

2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இலங்கை குறித்த சங்கத்தின் செயலாளர் லசித உமகிலிய இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் கண்காட்சிக்கு வருவோரிடம் நூல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) குறைக்கக் கோரும் பொது மனுவில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆன்டிற்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இம் மாதம் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும்.

புத்தக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும், பெறுமதி சேர் வரி (VAT) தொடர்ந்தும் வெளியீட்டாளர்கள் குறிப்பிடத்தக்கத் தள்ளுபடிகளை வழங்குவதைத் தடுக்கிறது என லசித உமகிலிய குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects