செப்டெம்பர் மாதத்தின் இதுவரையான நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 90,393 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 25,668 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,669 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 5,796 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5,246 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 4,677 சுற்றுலாப் பயணிகளும், ஸ்பெயினிலிருந்து 3,382 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 3,211 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 3,008 சுற்றுலாப் பயணிகளும், பங்களாதேஷிலிருந்து 2,528 சுற்றுலாப் பயணிகளும், ஜப்பானிலிருந்து 2,497 சுற்றுலாப் பயணிகளும், ஏனைய நாடுகளிலிருந்து 27,711 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 56 ஆயிரத்து 916 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects