பாடசாலைகளில் மனிதவள மேம்பாட்டை முன்னெடுக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளை மூலமாக நடவடிக்கை
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க, பாடசாலைகளில் மனிதவள மேம்பாட்டை முன்னெடுக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் நீண்டகால திட்டத்தின்படி பாடசாலைகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்படுவதுடன், சீன மக்கள் குடியரசுடன் இணைந்து பாடசாலை அமைப்பில் மனிதவள திறன் வளர்ப்பதற்கான வெளிநாட்டு பயிற்சி திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பயிற்சித் திட்டத்தின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
டிஜிட்டல் அரசாங்கக் கொள்கைக்கு ஏற்ப, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் பாடசாலை வலய மற்றும் மாகாண மட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் மாற்றத் திட்டம், நாட்டின் கல்வி துறையில் மனிதவள மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
இதன் முதல் கட்டமாக 38 பேர் கொண்ட குழுவொன்று வெளிநாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










