2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 55 புதிய முதலீட்டுத் திட்டங்கள் அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை 55 புதிய முதலீட்டு திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், 49 விரிவாக்கப்பட்ட திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் ஆடைகள் மற்றும் புடவை தொடர்பான திட்டங்களுக்குள் அடங்குகின்றன.

அத்துடன், அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பீடு செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை 1121 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என தெரிவிக்கிறது.

செப்டம்பர் வரையிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் வரவு 787 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects