கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்க ஏற்பாடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1,070 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 22 குடியிருப்பு வீடுகளில் 14,559 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக, மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன, ரந்திய உயன, லக்முத்து உயன, முவதொர உயன, சியசத செவன, புரதொர செவன, ஜயமக செவன, மிஹிஜய செவன, ஹெலமுத்து செவன, சியபத செவன, லக்சேத செவன, லக்கிரு செவன ஆகிய வீட்டுத் திட்டங்களுக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட இந்த ஆண்டு இறுதியில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரிமைப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்குகின்றது.

சில விதிகள் மற்றும் விதிமுறைகளின் சிக்கலான சூழ்நிலையால் இந்த வீடுகளின் உரிமை தாமதமானது. ஏற்கனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகளை பெற்றுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த வருட இறுதிக்குள் அனைத்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ பத்திரங்களை வழங்கிய பின்னர், குடியிருப்பாளர்களின் பிரதிநிதித்துவத்துடன் நிறுவப்பட வேண்டிய கூட்டு ஆதன முகாமைத்துவக் கூட்டுத்தாபனத்தினால் இந்த வீடுகளின் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் “உறுமய” அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects