சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் முன்னதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதோடு சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வுபெற்றுள்ள நிலையில் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால 17.11.2023 அன்று புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇