தேசிய உற்பத்தித்திறன் சமூக உற்பத்தி திட்டத்தின் கீழ் வெளிநாட்டுத் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் இ.புவனேந்திரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.12.2024 அன்று இடம் பெற்றது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து வெளிநாட்டுத் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தியது.
எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை வழங்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டமாக இது இடம் பெற்றது.
இதன் போது வருமான அளவை மேம்படுத்துவதற்கான தொழில்சார் திறன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கான தந்திரோபாயங்கள் வழங்கப்பட்டதுடன் இவர்களை வலுப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கான அனுபவ பகிர்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ.ரகுநாதன், புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு பல்வேறு பட்ட செயற்திட்டங்கள் அரசால் மேற்கெள்ளப்பட்டு வருவதுடன் பாதுகாப்பான புலம்பெயர்தலை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிநாட்டில் தொழில் முனைவோர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇