மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14.10.2025) காலை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பை இலங்கை மின்சார சபையானது முன்மொழிந்திருந்தது.

இந்த முன்மொழிவு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் செயல்முறை நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects