நாட்டில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. இந்நிலைமைகள் குறித்து பொது மக்களை அறிவுறுத்தியுள்ள சுகாதரப் பிரிவு அவதானமாகச் செயற்படுமாறும் கோரியுள்ளது.
அதன் அடிப்படையில், டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரசீலா சமரவீர இது பற்றித் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுங்கள்.
விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை அகற்றி, தினமும் புதிய தண்ணீரை பாத்திரங்களில் சேர்க்கவும்.
டெங்கு முட்டைகள் தேங்காதிருப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். பாத்திரங்களின் மேற்பரப்பில் டெங்கு முட்டைகள் இருந்தால் டெங்கு நுளம்புகள் எளிதில் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளில், விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் முறையற்ற முறையில் வைக்கப்படும் பாத்திரங்களிலே, நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு இதுவரை 39,826 டெங்கு நோய் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










