மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார்.

முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது.

இது தொடர்பில், தொடர்புடைய தரப்பினர்களிடம் ஆணைக்குழு கருத்துகளையும் ஆலோசனைகளையும் கோரியிருந்தன.

அவற்றை பரிசீலித்ததையடுத்து, மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது எதிர்வரும் 3 மாதங்களுக்கு தற்போதைய கட்டணத்தையே பேணிச் செல்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects