சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்திய சமுத்திர சுனாமி பயிற்சிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்திய சமுத்திர சுனாமி பயிற்சிகள் காத்தான்குடியில் இடம் பெறவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (15.10.2025) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு காலி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இம்முறை Mock Drill இடம் பெறவுள்ளன.

இந்நிகழ்வின் வளவாளராக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, பிரதிப்பணிப்பாளர் மகேந்திர ஜெகத், திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுன தாஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதன் போது சுனாமி அலை தாக்கம் ஏற்படும் போது மக்களை எவ்வாறு பாதுகாப்பது எவ்வாறு முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 243 படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரதீப்களுபான, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects