இலங்கை புகையிரத சேவையின் மேற்பார்வை முகாமையாளர் தரம் III பதவிக்கு 98 தொழில் வல்லுனர்களை ஆட்சேர்க்கும் நிகழ்வு 13.10.2025 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி (பதில் கடமையாற்றும்) அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
“புகையிரத திணைக்களத்தை, தாம் விரும்பிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு மிக முக்கியமான காரணி மனித வளம். எதிர்காலத்திலும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வோம்” என்றும் அமைச்சர் கூறினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










