மட்டக்களப்பு சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையிலும், பிரதான ஜெயிலர் இரங்க ரட்ணாயக்கவின் வழிகாட்டலிலும் முதன் முறையாக 19.10.2025 அன்று பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றின.
இப்போட்டியானது 10 ஓவர்கள் கொண்டதுடன் அணிக்கு 11 பேரைக் கொண்டதாக அமைந்தது.
அத்தோடு ஒவ்வொரு போட்டிகளின் முடிவிலும் ஆட்ட நாயகன் விருதுகள் வழங்கப்பட்டதுடன் இறுதி நிகழ்வில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
நடைபெற்று முடிந்த போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலை அணி முதல் இடத்தையும் திருகோணமலை சிறைச்சாலை அணி இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை பொலன்னறுவை சிறைச்சாலை அணியும் பெற்றுக்கொண்டது.
இவ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அதிதிகளாக திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் பிரேமவன்ச, மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலை பிரதான ஜெயிலர் பிரியந்த புஸ்பகுராம, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இச் சுற்றுப் போட்டிக்கான ஊடக அனுசரணையை மதகு ஊடகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










