நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை தேசிய அளவில் தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படும் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில், இந்திய எல்லை மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 24 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நேபாளத்தில் மொத்தமாக 48 ஆயிரத்து 798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49 ஆயிரத்து 937 பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇