உயர்தர பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம் மாதம் 26.04.2025 அன்று வௌியிடப்பட்டது .

அதன் அடிப்படியில் பரீட்சார்த்திகள் http://ONLINE EXAMS.GOV.LK எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்பேற்றை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் முறை நடைபெற்ற உயர்தர பரீட்சையில் 274,361 பரீட்சாத்திகள் தோற்றினர்.

அதில் 222,774 பாடசாலை பரீட்சார்த்திகளும், 51,587 தனிப்பட்ட்ட பரீட்சார்த்திகளும் இப் பரீட்சைக்கு தோன்றியிருந்தனர்.

இந் நிலையில், 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

அதேநேரம் 456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects