மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிள்ளைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை…..

இன்றைய காலகட்டத்தில் எம்முடைய பிள்ளைகளுக்கு குறிப்பாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு வயிற்று வலி ஏற்படுவது உண்டு அல்லது பிள்ளைகள் மலம் கழிக்கும் போது அசௌகரியத்தை உணர்ந்து அதனை எதிர்கொள்ள தெரியாமல் அழுவதும் உண்டு.

இத்தகைய தருணங்களில் பெற்றோர்கள் பதற்றம் அடையாமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அவர்களுடைய நாளாந்த – அசுத்தம் கலந்த நடவடிக்கையின் காரணமாக அவர்களுக்கு குடல் புழுக்கள் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் ‘பின்வோர்ம்ஸ்’ என்றும், ‘என்டொரோபயாஸிஸ்’ என்றும், ‘இன்டெஸ்டினல் வோர்ம்ஸ்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

இதன் பாதிப்பு அதாவது குடலுக்குள் புழுக்கள் சென்று அவை அதிகரித்து விட்டால் பிள்ளைகள் மலம் கழிக்கும் பகுதியை ஆக்கிரமித்து, அங்கு ஒரு கடுமையான அசௌகரியத்தை உண்டாக்கும். பிள்ளைகள் அப்பகுதியில் ஏற்படும் அரிப்பை தங்களது கைகளால் பாவிப்பார்கள்.

இத்தகைய பாக்டீரியாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இவை அதிகரித்து விட்டால் அவை குடல் நோயாகவும், வயிற்று வலியாகவும் வெளிப்படுத்தும். சில பெண் பிள்ளைகள் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறியையும் வெளிப்படுத்துவார்கள்.

இதன் போது அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்றால் அவர்கள் பரிந்துரைக்கும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பின் தன்மைகள் துல்லியமாக அவதானித்து வைத்தியர்கள் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ‘டிவாமிங்’ எனப்படும் சிகிச்சையையும் அளிப்பார்கள்.

மேலும் பிள்ளைகள் விளையாடும் பொம்மைகள்- இலத்தினனியல் சாதனங்கள், நகம் கடித்தல், விரல்களை சூப்புதல், கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளாமல் அசுத்தப்படுத்திக் கொள்தல், திறந்தவெளியில் விளையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதனால் குழந்தைகளை விளையாடும் போதும் வேறு தருணங்களிலும் அவர்களை துல்லியமாக அவதானித்து கொண்டேயிருக்க வேண்டும். குறிப்பாக மலம் கழிக்கும் போது அவர்களின் கைகள் மலம் கழிக்கும் பகுதிக்குச் சென்றால் உடனடியாக அதன் மீது அவதானம் செலுத்தி, பாதிப்பை கண்டறிய வேண்டும் என வைத்தியர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய பாதிப்பு முதியோர்களுக்கும் ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வைத்தியர் ஸ்ரீதேவி

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects